Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விசாரணைக்கு கமல் ஆஜராக தேவையில்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு

kamal hassan

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். 22 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க கமல், ‌சங்கர் இருவரும் திட்டமிட்டனர். லைகா நிறுவனம் தயாரிக்க கடந்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கியது.

கடந்த பிப்ரவரி 1-ந் தேதி படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். படப்பிடிப்பில் நடந்த இந்த திடீர் விபத்து காரணமாக படப்பிடிப்பு முழுமையாக பாதிக்கப்பட்டு பாதியில் நிற்கிறது.

இந்த விபத்து காரணமாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது. சங்கர், கமல்ஹாசன் இருவரையும் விசாரித்தது பரபரப்பானது. இவர்கள் தவிர விபத்து நடந்தபோது படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறையினர் துன்புறுத்துவதாக நடிகர் கமல்ஹாசன் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். கமல்ஹாசனின் இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க நீதிபதி இளந்திரையன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களின் முடிவில் கமல் விசாரணைக்கு ஆஜராக தேவையில்லை என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.