Vijay
நடிகர் விஜய் நடிக்கும் 64-வது படம் மாஸ்டர். இந்த படத்தை மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கிஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. கடந்த மாதம் குட்டி ஸ்டோரி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. இந்த பாடலை நடிகர் விஜய் பாடியிருந்தார். இந்த பாடல் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியிருந்தாலும் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு பகிரப்பட்டது. பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட பல பிரச்சினைகளை பேசியது இப்பாடல். இதனை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதி இருந்தார்.
மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீடு வரும் 15-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் படம் வரும் கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜய் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்துக்கு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தனது ஒவ்வொரு படத்தின் படப் பிடிப்பு முடிந்த பிறகும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று ஓய்வெடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இடுப்பைக்காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா…
நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
கருப்பு நிற உடையில் மாளவிகா மோகனன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா, இயக்கத்திலும்,அ.அன்பு ராஜா,…
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர்…