பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அனிமல்.
வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக இந்த படம் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது. இந்த நிலையில் இந்த படம் 10 நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
ஆமாம் இதுவரை இந்த படம் ரூ 700 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லியோ, ஜெயிலர் படங்களின் வசூல் சாதனை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்துள்ளதாக பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.