தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் வலிமை. பக்கா ஆக்சன் என்டர்டெயின்மென்ட் திரைப்படமாக இந்த படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
முதல் நாளிலேயே 70 கோடியை தாண்டி வசூல் செய்தது. தமிழகத்தில் மட்டும் 37 கோடி ரூபாய் வசூல் செய்தது. சென்னையில் மட்டும் 1.8 கோடி ரூபாய் வசூலித்தது. படம் வெளியாகி 10 நாட்கள் ஆகும் நிலையில் உலகம் முழுவதும் சேர்த்து 200 கோடி வசூல் செய்து 200 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.
இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.