Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

புதிய உச்சத்தைத் தொட்ட வாத்தி கம்மிங் பாடல்

100M Views For Vaathi Coming

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ‘வாத்தி கம்மிங்…’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இப்பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.