நடிகர் தனுஷ் தன் கைவசம் பல படங்களை வைத்துள்ளார். அடுத்து அவர் ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். அவருடன் சாரா அலி கான் ஹீரோயினாக நடிக்கிறார்.
இதே படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளார் என்றும் அவருக்கு சம்பளமாக 120 கோடி ருபாய் தரப்படுகிறது என்றும் முக்கிய பாலிவுட் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் ஒரு படத்திற்கு மிக அதிக சம்பளம் பெரும் நடிகர் என்கிற பெருமையை அக்ஷய் பெறுகிறார்.
ஏற்கனவே ரஜினி, விஜய் போன்ற நடிகர்கள் 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெறுகின்றனர் என சமீபத்தில் செய்திகள் வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.