தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன் முடிவடைந்துள்ள நிலையில் வரும் அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்களுடன் ஆறு சாமானிய மக்கள் என மொத்தம் 24 போட்டியாளர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கொள்ள போகும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்த உறுதியான லிஸ்ட் ஒன்று வெளிவந்துள்ளது.
அந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ள பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க
1. ஜி பி முத்து
2. மதுரை முத்து
3. தயாரிப்பாளர் ரவீந்திரன்
4. மைனா நந்தினி
5. பாடகி ராஜலட்சுமி
6. சீரியல் நடிகை ஆயிஷா
7. விஜே மகேஸ்வரி
8. அமுதவாணன்
9. டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்
10. சீரியல் நடிகை ஸ்ரீநிதி
11. சீரியல் நடிகர் மணிகண்டன்
12. மாடலிங் நடிகை ஷரினா
13. ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட 13 போட்டியாளர்கள் பங்கேற்க இருப்பது உறுதியென தெரியவந்துள்ளது.
மேலும் 6 சாமானிய போட்டியாளர்கள் உட்பட மேலும் சில பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.
