தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள வலிமை திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தப் படம் முதல் நாளே சென்னையில் 1.7 கோடி வசூல் செய்திருந்தது. தமிழகம் முழுவதும் சேர்த்து 36.17 கோடி வசூல் செய்தது. ஏற்கனவே இந்த விவரங்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இந்திய அளவிலான வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் மட்டும் இந்தப் படம் முதல்நாளில் 76 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.