தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
மொத்தம் 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். ஆரம்பம் முதலே சண்டை, சச்சரவு என சர்ச்சைக்கு பஞ்சமில்லாத அளவில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
பெண்களிடம் தொடர் சில்மிஷம் செய்து வரும் அசல் கோலார் தான் நிவாவை காதலிப்பதாக சொல்கிறார்கள். நேற்றைய நிகழ்ச்சியில் கதிர், அசல், ஏடிகே உள்ளிட்டோர் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அப்போது நிவா புடவை கட்டி வர உடனே அசல் எழுந்து செல்ல இனிமே அவன் வர மாட்டேன், அங்கேயே தான் சுத்திக்கிட்டு இருப்பான் என கலாய்த்துள்ளார் ஏடிகே.
அசல், தனலட்சுமி பிரச்சனையின் போது அசலுக்கு ஆதரவாக பேசிய ஏடிகே இவ்வாறு கலாய்க்க அப்போ இவங்க தான் முதல் காதல் ஜோடி என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.