Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வசூலில் மாஸ் காட்டும் ராயன், இரண்டு நாள் வசூல் குறித்து வெளியான தகவல்

2 days collection of raayan movie update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ராயன்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து காளிதாஸ் ஜெயராம், சந்திப் கிஷன், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

முதல் நாளில் ரூ. 12 கோடி வரை வசூல் செய்து இருந்த இந்த திரைப்படம் இரண்டு நாள் முடிவில் ரூ. 27.5 கோடிகளை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனுஷின் பிறந்த நாளுக்கு கிடைத்த சிறப்பான விருந்து என தனுஷ் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

2 days collection of raayan movie update