தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை அந்தத் திரைப்படம் வெளியானது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது. தமிழகத்தில் முதல் நாளில் இந்த படம் 36 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதனையடுத்து தற்போது இரண்டாவது நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
இரண்டாவது நாளில் தமிழகத்தில் 23.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு நாள் வசூலையும் சேர்த்து இப்படம் தமிழகத்தில் மட்டும் மொத்தமாக 59.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் இன்னும் படு வேகமாக அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.