தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி மற்றும் பி ஜி முத்தையா கூட்டணியில் வெளியான கொம்பன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து இவர்களது கூட்டணியில் உருவான திரைப்படம் தான் விருமன்.
கார்த்திக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருந்த இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. முதல் நாளில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் நான்கு கோடி ரூபாய் வசூல் மற்றும் உலகம் முழுவதும் எட்டு கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. .
விக்ரம் படத்துக்கு அடுத்ததாக இரண்டாவது நாளில் அதிக வசூலை பெற்ற திரைப்படம் என்ற சாதனையை விருமன் படம் படைத்துள்ளது. இரண்டாவது நாளிலும் இந்த படம் சுமார் 8 முதல் 9 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இன்று சுதந்திர தினம் என்பதால் இன்றும் திரையரங்குகளில் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மூன்றே நாளில் இந்த படம் 30 கோடி வரை வசூல் செய்யலாம் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.