ஊரடங்கு ஓய்வு நேரத்தை தான் கழிப்பது எப்படி என்பது பற்றி காஜல் அகர்வால் கூறியதாவது:- “கொரோனா ஊரடங்கில் பழைய பழக்கங்களை கை கழுவிவிட்டு, புதிய பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ளலாம். நான் ஆன் லைனில் புதிய பயிற்சி வகுப்புகளில் சேர்ந்துள்ளேன். தியானம் கற்கிறேன். புத்தக வாசிப்பு பழக்கத்தையும் தொடங்கி இருக்கிறேன். சமையல், வீட்டு வேலை செய்வது, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது என்று இருக்கிறேன்.
மற்றவர்களும் இதை செய்யுங்கள். இதற்கு முன்பு ஓய்வில்லாமல் உழைத்து, எப்போது ஓய்வு கிடைக்குமோ என்று காத்திருந்தவர்களுக்கு இந்த ஊரடங்கு வசதியாக உள்ளது. வெளியே செல்லாமல் இருப்பது நமக்கு மட்டுமே நல்லது என்று இல்லை, நாட்டுக்கு செய்யும் சேவையாகவும் இருக்கும். 21 நாட்களும் சுய கட்டுப்பாட்டுடன் வீட்டுக்குள்ளேயே இருங்கள். தேவைகளையும், பயன்பாட்டையும் குறைத்து கொள்ளுங்கள்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.