தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்ததை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆறாவது சீசன் மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. இதுவரை இல்லாத அளவிற்கு மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர்.
முதல் வாரத்திலேயே சண்டையும் சச்சரமாக பிக் பாஸ் வீடு களைகட்ட தொடங்கியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் 21வது போட்டியாளராக கலந்து கொண்டு கடைசி நேரத்தில் ஷூட்டிங் காரணமாக வீட்டுக்குள் போகாமல் போனார் மைனா நந்தினி. விரைவில் அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார் எனவும் தகவல்கள் கசிந்து இருந்தன.
இப்படியான நிலையில் அவர் இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மைனா நந்தினியை அறிமுகம் செய்து வைத்து கமல்ஹாசன் உள்ளே அனுப்புவார் என சொல்லப்படுகிறது. இன்று என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
