பழசிராஜா, காயங்குளம் கொச்சுன்னி, மாமாங்கம் போன்ற பிரமாண்ட வரலாற்று திரைப்படங்களை தொடர்ந்து மலையாளத்தில் விரைவில் வெளிவர இருக்கும் படம் மரைக்காயர் – அரபிக் கடலின்டே சிம்ஹம்‘.
பிரியதர்ஷன் இயக்கி உள்ள இப்படம் தமிழில், மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் என்ற பெயரில் வெளியாகிறது. பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த சிறைச்சாலை படத்தை 1996-ம் ஆண்டு வெளியிட்ட தாணு, தற்போது இந்தப் படத்தை பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.
தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட படத்தை சுமார் 300 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார். “சிறைச்சாலை என்னும் பிரமாண்ட படைப்பில் உருவான இந்த கூட்டணி, 25 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நம் மக்களை பிரமிக்க வைக்கும் ஒரு காவிய படைப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்” என்கிறார் தாணு.
இந்தப் படத்தில் மோகன்லாலுடன், அர்ஜுன், பிரபு, அசோக் செல்வன், மஞ்சு வாரியார், கீர்த்தி சுரேஷ், சுஹாசினி, முகேஷ், நெடுமுடிவேணு, சித்திக், சுரேஷ் கிருஷ்ணா நடித்துள்ளனர். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார், ரோனி நபேல் இசை அமைத்துள்ளார். படம் வருகிற 26-ந்தேதி வெளிவருகிறது.