Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

25 நாளில் 18 முறை – மோகன் ராஜா நெகிழ்ச்சி

mohan raja

ஜெயம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ராஜா. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களை இயக்கினார்.

தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டுக்குள்ளேயே இருக்கும் மக்களுக்கு பொழுதுபோக்காக இருப்பது திரைப்படங்கள் தான்.

அப்படி இந்த சமயத்தில் தான் இயக்கிய படங்கள் 18 முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது என்று மோகன் ராஜா கூறியுள்ளார்.

மேலும், என் மகள் என்னிடம் ‘அப்பா நீங்க இயக்கிய 8 படங்கள் (ஜெயம், எம்.குமரன், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி, வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன்) மற்றும் சித்தப்பா நடித்த நிமிர்ந்து நில், பூலோகம், அடங்க மறு, வனமகன், கோமாளி என்கிற படங்கள் கடந்த 25 நாட்களில் 18 முறைக்கும் மேல் ஒளிபரப்பிவிட்டார்கள்’ என்று தான் குறித்து வைத்ததை காண்பித்து உற்சாகம் பகிர்ந்தாள் என்றார்.