தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். 25 வருடங்களுக்கு முன்னர் தரணி இயக்கத்தில் இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் கில்லி. த்ரிஷா நாயகியாக நடிக்க பிரகாஷ் ராஜ் வில்லனாக நடித்திருந்த இந்த திரைப்படம் தியேட்டர்களில் பட்டய கிளப்பியது.
இந்த நிலையில் 25 வருடங்களுக்கு பிறகு இந்த மாத ஆரம்பத்தில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் ரி ரிலீஸ் செய்யப்பட்டது. விஜய் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று புதுப்படம் பார்ப்பது போலவே கில்லி ரி -ரிலீஸை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
இந்த படம் வெளியாகி 25 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் ரூபாய் 30 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் 20 கோடி ரூபாயும் மற்ற இடங்களில் 10 கோடியும் வசூல் செய்துள்ளது.
இந்த வசூலில் 30 % தயாரிப்பாளருக்கும் 70% திரையரங்க உரிமையாளருக்கும் செல்லும் என்பதால் திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரிய லாபத்தை கொடுத்த ஒன்றாக அமைந்துள்ளது இந்த கில்லி ரி ரிலீஸ்.
