அட்டகாசமான நடிப்பிற்கு பெயர் போனவர் நிவின் பால். இவர் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் போன்ற பிறமொழிகளிலும் நடித்து அசத்தியுள்ளார். சென்ற ஆண்டு இவர் நடித்து வெளியான “மூத்தோன்” படத்திற்கு நியூயார்க் இந்தியன் பிலிம் பெஸ்டிவல் விழாவில் திரையிடப்பட்டு உலக அரங்கில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
இவரின் அதிரடியான கதாபாத்திரத்தை தாண்டியும் பெண்களுக்கு பிடித்த கனவுக்கன்னியாக வலம் வரும் நிவின் பாலிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
நடிகையும் இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்கியிருந்த “மூத்தோன்” படத்திற்கு ஒன்றல்ல மூன்று சர்வதேச விருதுகளை பெற்றது. சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரம் என ஒரே திரைப்படத்தில் 3 விருதுகளை வாரி குவித்துள்ள இந்த திரைப்படம் தற்பொழுது இந்திய அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும் மூத்தோன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சஞ்சனா திபு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் நிவின் பாலி பெற்ற முதல் விருது இதுவேயாகும்.
இந்தியாவில் பல விருதுகளையும் தட்டிச் என்ற பெருமைக்குரிய மூத்தோன் படத்திற்கு சர்வதேச அளவில் விருதுகளை பெற்று இந்தியாவின் பெருமையை பறைசாற்றிய படக்குழுவினருக்கு திரையுலகமே வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.