Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

3 நாட்களில் கோப்ரா படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

3-days-collection-of-cobra

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் கோப்ரா.

சியான் விக்ரம் கிட்டத்தட்ட எட்டு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் இர்ஃபான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி சிறப்பு திரைப்படமாக வெளியான இந்த படம் முதல் நாளில் 10 கோடி ரூபாய் வசூலை பெற்றது. கலவையான விமர்சனங்களால் படத்தின் வசூல் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் 3 நாள் முடிவில் மொத்தமாக 21 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று முதல் இரண்டு தினங்களுக்கு விடுமுறை என்பதால் மீண்டும் படத்தின் வசூல் அதிகரிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

 3-days-collection-of-cobra

3-days-collection-of-cobra