தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் லியோ.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் வெளியான இந்த திரைப்படம் முதல் நாளில் 148 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாள் வசூல் சற்று குறைந்திருந்த நிலையில் மூன்றாவது நாள் வசூல் மீண்டும் சூடு பிடித்து அதிகரித்துள்ளது. மூன்று நாளில் உலகம் முழுவதும் இப்படம் ரூபாய் 280 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
நான்காவது நாளிலேயே 300 கோடியை தாண்டி வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 30 மட்டுமல்லாமல் வெகு விரைவில் 500 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பிலும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.