Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் மூன்று சீரியல்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம். காரணம் என்ன தெரியுமா?

3 serials time changes in vijay tv details update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவிக்கு அடுத்தபடியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொலைக்காட்சி சேனலாக இருந்து வருகிறது விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

விரைவில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதால் சில சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளனர். இந்த நிலையில் தற்போது நாளை முதல் மூன்று சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் அதிரடியாக மாற்றப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதாவது இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ஆஹா கல்யாணம் இனி 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே 2 சீரியல் இனி இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

மேலும் 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த மகாநதி சீரியல் இனி இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் போது ஈரமான ரோஜாவே சீசன் 2 முடிவுக்கு வந்துவிடும் என்பதால் இந்த நேரம் மாற்றம் நடைபெற்று இருப்பதாக கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

3 serials time changes in vijay tv details update
3 serials time changes in vijay tv details update