தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் ராஜ முருகன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜப்பான். கடந்த வாரம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் பெரிய அளவில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
முதல் நாளில் 4.11 கோடி ரூபாய் வரை வசூல் செய்த நிலையில் அடுத்தடுத்த தினங்களில் படத்தின் வசூல் குறைந்து கொண்டே வந்தது. மூன்று நாளில் பதினொரு கோடி வரைவது செய்திருந்த இந்த திரைப்படம் நான்காவது நாளில் வெறும் ஒரு கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.
அதாவது நான்கு நாளில் மொத்தமாக 12 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது கார்த்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படத்தில் வசூல் 20 கோடி தாண்டுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.