சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் பிரபலங்களாக இருந்து வருபவர்களுக்கு திருமணம் விவாகரத்து போன்ற விஷயங்கள் எல்லாம் சர்வ சாதாரணம் ஆகிவிட்டன.
சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொண்டு எல்லாமே தோல்வியில் முடிந்து தனியாக வாழ்ந்து வருபவர்களும் உண்டு.
காதலித்து திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையே வேண்டாம் என விவாகரத்து பெற்று பிரிந்து வாழும் பிரபலங்கள் கூட சின்னத்திரையில் இருந்து வருகின்றனர். அப்படியாக திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்று பிரிந்த பிரபலங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
1. ஈஸ்வர் – ஜெயஸ்ரீ :
இவர்கள் இருவரும் சின்னத்திரை பிரபலங்கள் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வருகின்றனர். இவர்கள் பிரிவுக்கு காரணம் மகாலட்சுமி தான் என்ற பேச்சு கிளம்பியது மறுக்க முடியாத ஒன்று.
2. தினேஷ் – ரக்ஷிதா :
பிரிவோம் சந்திப்போம் சீரியலில் இணைந்து நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரக்ஷிதா முன்னாள் கணவர் தினேஷ் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
3. அர்ணவ் – திவ்யா :
சின்னத்திரை பிரபலங்களான இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டு திவ்யா கர்ப்பமான பிறகு தங்களது திருமணம் குறித்து அறிவித்தனர். ஆனால் கொஞ்ச தினங்களிலேயே திவ்யா அர்ணவுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரிடம் இருந்து பிரிந்து சென்றார். ஒவ்வொரு நாளும் அருளும் ஒவ்வொரு பெண்களுடன் ஆபாசமாக பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
4. விஷ்ணுகாந்த் – சம்யுக்தா :
சிப்பிக்குள் முத்து சீரியலில் ஜோடி பாட்டு நடித்த இவர்கள் காதலில் விழுந்து நிஜ வாழ்க்கையில் திருமண பந்தத்தில் இணைந்தனர். ஆனால் கல்யாணம் ஆன ஒரே மாதத்தில் இருவரும் பிரிந்து ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டில் வருகின்றனர். இவர்களது பஞ்சாயத்து இன்னும் முடிந்த பாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5. தாடி பாலாஜி – நித்யா :
ஏற்கனவே முதல் மனைவியை இழந்த தாடி பாலாஜி அதன் பிறகு நித்யாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் குடிபோதையில் தன்னிடம் தொடர்ந்து தகராறு செய்து வருவதாக நித்யா தாடி பாலாஜி மீது குற்றச்சாட்டுகளை வைத்து அவரிடம் இருந்து பிரிந்தார். இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.