தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். ஐந்து சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு சாமானிய போட்டியாளர்கள் உட்பட மொத்தம் 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.
இவர்களிலிருந்து இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோலார், ஷெரீனா, மகேஸ்வரி உள்ளிட்டோர் வெளியேறி உள்ளனர். மேலும் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் அசிம், ராபர்ட் மாஸ்டர், நிவாஷினி, கதிரவன், குயின்ஷி, ஆயிஷா, ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
நாமினேஷன் பட்டியல் வெளியான போது இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேற ராபர்ட் மாஸ்டர் அல்லது நிவாஸினி உள்ளிட்டவருக்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தோம். அதற்கேற்றார் போல தற்போது வரை பதிவாகியுள்ள ஓட்டுக்களின் படி நிவாசினி மற்றும் ராபர்ட் மாஸ்டர் தான் மிகக் குறைந்த ஓட்டுக்களுடன் கடைசி இடங்களை பிடித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
இதனால் இவர்களில் ஒருவர் வெளியேறவே அதிக வாய்ப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. வெளியேறப் போகும் அந்த ஒரு போட்டியாளர் யார் என்பதை இந்த வார இறுதியில் பார்க்கலாம்.