தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வரும் இவர் மகான் திரைப்படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்திருந்த கோப்ரா திரைப்படம் வெளியானது.
கடந்த வாரம் வெளியான இந்த படத்தில் விக்ரம் கிட்டத்தட்ட எட்டு கெட்டப்புகளில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக படத்தின் ரன்னிங் டைம் கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில் கிட்டத்தட்ட 20 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டன.
இருந்தபோதிலும் படம் பெரியதாக எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என சொல்லப்படுகிறது. இந்த ஆறு நாள் முடிவில் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 48 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
படத்தின் வசூல் இதே அளவிலேயே இருந்தால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கவும் வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

6-days-collection-of-cobra