தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்று சாதனை படைக்கின்றன.
அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் தேசிய விருது பெற்ற நடிகர்கள் என கணக்கிட்டால் இதுவரை ஏழு பேர் மட்டுமே தேசிய விருது வாங்கியுள்ளனர். அந்த நடிகர்கள் யார் யார் எந்த படத்திற்காக தேசிய விருது வாங்கினார்கள் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. எம்ஜிஆர் – ரிக்ஷாக்காரன்
2. கமல்ஹாசன் – மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன்
3. சியான் விக்ரம் – பிதாமகன்
4. பிரகாஷ் ராஜ் – காஞ்சிவரம்
5. விஜய் சேதுபதி – சூப்பர் டீலக்ஸ்
6. தனுஷ் – அசுரன் மற்றும் ஆடுகளம்
7. சூர்யா – சூரரைப் போற்று
தேசிய விருது பெற்ற ஏழு நடிகர்களில் உலக நாயகன் கமல்ஹாசன் மட்டுமே அதிகபட்சமாக மூன்று தேசிய விருதுகளை வாங்கி உள்ளார். அவருக்கு அடுத்ததாக நடிகர் தனுஷ் இரண்டு தேசிய விருதுகளை வாங்க மற்ற நடிகர்கள் தலா ஒரு தேசிய விருதுகளை மட்டுமே பெற்றுள்ளனர்.
