தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த வாரம் எட்டாவது எலிமினேஷன் நடக்கும் என்று முடிந்த நிலையில் இந்த வாரம் ஒன்பதாவது எலிமினேஷன் நடைபெற உள்ளது.
இதற்கான நாமினேசன் பட்டியலில் அர்ச்சனா, விசித்ரா, ரவீனா, மணி, பூர்ணிமா, அக்ஷயா, பிராவோ, மாயா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் தற்போது வரை பதிவாகி உள்ள ஓட்டுகளின் அடிப்படையில் மாயா தான் குறைந்த ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
அவருக்கு அடுத்தபடியாக சொற்ப ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பிராவோ இடம் பெற்றுள்ளார். இதனால் கடைசி நிமிடத்தில் எப்படி மாயாவை காப்பாற்றி பிராவோவை வெளியேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடக்கப்போவது என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.