தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த ஏழாவது சீசனில் இந்த வாரம் ஒன்பதாவது எலிமினேஷன் நடைபெற உள்ளது.
இதற்கான நாமினேஷன் பட்டியலில் அர்ச்சனா, விசித்ரா, ரவீனா, மணி, பூர்ணிமா, அக்ஷயா, பிராவோ மற்றும் மாயா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் ஆரம்பத்தில் மாயா மிக குறைந்த ஓட்டுக்களை பெற்று கடைசி இடத்தில் இருந்து வந்தார். அவருக்கு அடுத்த இடத்தில் பிராவோ, அக்ஷயா ஆகியோர் இருந்தனர்.
இந்த சூழ்நிலையில் தற்போது ஓட்டிங் நிலவரம் அப்படியே தலைகீழாக மாறி உள்ளது. மாயாவுக்கு ஓரளவு ஓட்டிங் கிடைத்து அவர் பிராவோ, அக்ஷயா ஆகியோரை காட்டிலும் சொற்பமான ஓட்டுக்களை பெற்று முன்னேறி உள்ளார்.
மேலும் இவர்களை விட ஓரளவுக்கு ஓட்டுகளை பெற்று சேஃப் ஜோனில் இருந்து வந்த பூர்ணிமா தற்போது குறைவான ஓட்டுகளுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனால் இவருக்கும் பிராவோ மற்றும் அக்ஷயா ஆகியோருக்கும் இடையே நூற்றுக்கும் குறைவான ஓட்டுகளே வித்தியாசம் உள்ளது.
இதே நிலை நீடித்தால் பூர்ணிமா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கன்டென்ட் கொடுக்கும் அவரை வைத்துக் கொண்டு பிராவோ அல்லது அக்ஷயாவையே வெளியேற்றுவார்கள் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.