Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜீவா கண்ணனுடன் இணைந்து ஹாஸ்பிடலில் ஆட்டம் போட்ட தனம்.. கிண்டலடிக்கும் ரசிகர்கள்

pandian stores serial dhanam dance video

சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் அண்ணனாக மூர்த்தி வேடத்தில் ஸ்டாலின் நடிக்க அண்ணியாக தனம் வேடத்தில் சுஜிதா தனுஷ் நடித்து வருகிறார். ‌

கூட்டுக் குடும்பத்தை மையமாக கொண்டு உருவாகிய சீரியல் என்பதால் மக்கள் மத்தியில் தொடர்ந்து இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இப்படியான சூழலில் கதிர் வீட்டை விட்டு வெளியே சென்றதால் மூர்த்திக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி இருப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

மூர்த்தி நெஞ்சு வலியில் மருத்துவமனையில் இருக்க தனம் தன்னுடைய கொழுந்தன்களான ஜீவா மற்றும் கண்ணனுடன் சேர்ந்து ஆட்டம் போட்டு உள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் மூர்த்தி நெஞ்சுவலியால் ஹாஸ்பிடல் இருக்காரு உங்களுக்கு இப்படி ஒரு ஆட்டம் தேவையா என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ