Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விரைவில் முடிவுக்கு வரும் பிரபல ஜீ தமிழ் சீரியல்..வெளியான அதிர்ச்சி தகவல்

end-card-to-sembaruthi-serial update

தமிழ் சின்னத்திரையில் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால் ஒரு சில சீரியல்கள் மட்டுமே ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிறது. அப்படியான சீரியல்களில் ஒன்று தான் ஜீ தமிழ் செம்பருத்தி.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் பார்வதியாக ஷபானா நடிக்க ஆதியாக அக்னி நடித்து வருகிறார். அகிலாண்டேஸ்வரி வேடத்தில் பிரியா ராமன் நடிக்கிறார்.

ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் 1400 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கிளைமாக்ஸ்ஸை நெருங்க உள்ளது. அதாவது முழுமையாக முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

அதே சமயம் செம்பருத்தி சீரியல் முடிவுக்கு வருகிறது என்றால் அதன் கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் எனவும் ரசிகர்கள் மத்தியில் விண்ணை முட்டும் அளவுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சின்னத்திரை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு செம்பருத்தி கிளைமாக்ஸ் பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

 end-card-to-sembaruthi-serial update
end-card-to-sembaruthi-serial update