தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. சிறு சிறு குறும்படங்களில் நடித்து அதன் பின்னர் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமான இவர் ஹீரோ வில்லன் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கலக்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளின் நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்தியில் மட்டும் தற்போது நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படியான நிலையில் இவர் இந்தியில் ஒரு படத்திற்கு 40 கோடி ரூபாய் சம்பளம் என நான்கு படங்களுக்கு மட்டும் ரூபாய் 160 கோடி சம்பளமாக வாங்குகிறார் என தெரியவந்துள்ளது.
விஜய் சேதுபதியின் இந்த அசுர வளர்ச்சியை கண்டு அவருடைய ரசிகர்கள் மெய்சிலிர்த்து வருகின்றனர்.
