நடிகர் மாதவனின் ‘இறுதிச்சுற்று’ என்ற படத்தில் குத்துச் சண்டை வீராங்கனியாக நடித்து அசத்தி அனைவருக்கும் பரிச்சயமானவர்தான் நடிகை ரித்திகா சிங். இவர் நிஜ வாழ்க்கையிலும் பிரபல கூத்து சண்டை வீராங்கனியாக இருந்தவர் தான். இருந்தாலும் தமிழ் சினிமாவில் சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே போன்ற ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
தற்போது ஒரு சில படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ரித்திகா சிங் அவ்வப்போது புதுவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களையும் எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு கொண்டிருப்பார்.
அதேபோல் தற்போது எடுத்திருக்கும் புதிய போட்டோ ஷூட் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்புகைப்படத்தில் பார்க்க நடிகை ரித்திகா சிங் வேற மாதிரி இருந்ததால் இது ரித்திகா சிங் தானா என்று அடையாளம் தெரியாமல் ரசிகர்கள் திணறியுள்ளனர்.தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
???? pic.twitter.com/QbqEbsuTLg
— Ritika Singh (@ritika_offl) August 3, 2022