Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராஜா ராணி 2 சீரியல் செந்திலுக்கு நடந்து முடிந்த திருமணம்.. வைரலாகும் புகைப்படத்தால் குவியும் வாழ்த்து

Raja Rani 2 serial Balaji Marriage Photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் ஆழியார் மானசா நாயகி நடிக்க சித்து ஹீரோவாக நடித்து வந்த நிலையில் பிரசவம் காரணமாக சீரியல் இருந்து விலகிக் கொள்ள அவருக்கு பதிலாக தற்போது ரியா என்ற நடிகை நடித்து வருகிறார்.

மேலும் அர்ச்சனா வேடத்தில் விஜே அர்ச்சனா நடித்து வந்த நிலையில் தற்போது அவரும் விலகி அவருக்கு பதிலாக புதிய நடிகை நடித்து வருகிறார். சரவணன் பெரிய தம்பியாக செந்தில் என்ற கதாபாத்திரத்தில் பாலாஜி நடித்து வருகிறார்.

தற்போது நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் அவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஹரிணி என்ற பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.