இந்திய திரையுலகில் உலக நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் விஜய் தொலைக்காட்சியில் மக்களின் பேவரட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். எப்போதும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர், தமிழ்த் திரையுலகம் கண்டதிலேயே அதிக அளவு கேளிக்கையை ரசிகர்களுக்குக் கொடுத்து பெரும் நட்சத்திரமாகத் திகழ்ந்தவரும், இன்றளவும் மக்கள் மனதில் நாயகனாக நிலைத்து நிற்பவருமான மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ்த் திரையுலகம் கண்டதிலேயே அதிக அளவு கேளிக்கையை ரசிகர்களுக்குக் கொடுத்து பெரும் நட்சத்திரமாகத் திகழ்ந்தவரும், இன்றளவும் மக்கள் மனதில் நாயகனாக நிலைத்து நிற்பவருமான மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்து.
— Kamal Haasan (@ikamalhaasan) January 17, 2023