பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவது புற்றுநோய். அதிலும் குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் வயதானவர்களை அதிகம் பாதிக்கிறது. குறிப்பாக இளைஞர்களுக்கு அதிகம் வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றன.
பெருங்குடல் புற்றுநோய் வர முக்கிய காரணம் இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கும் தான். பெருங்குடலில் புறணியில் ஆரோக்கியமான செல்கள் கட்டுப்பாடற்ற வளர்ச்சி அடைந்தால் பெருங்குடல் புற்றுநோய் வரும் ஆபத்து இருக்கிறது.
இதன் ஆரம்ப அறிகுறிகள் வைத்தே நாம் கண்டுபிடித்து விடலாம்.
வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகும். மலத்தில் ரத்தப்போக்கு, வாயு உபாதைகள், எடை இழப்பு, நாள் பட்ட சோர்வு போன்ற அறிகுறிகள் இதற்கு தென்படும்.
இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது சிறந்தது. ஏனெனில் ஆரம்பத்தில் கண்டுபிடித்து விட்டால் 90% உயிரை காப்பாற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.