தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று வரும் திரைப்படம் விடுதலை. இதில் சூரி கதாநாயகனாக நடிக்க இப்படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
இளையராஜா இசையமைப்பில் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுகளை குவித்து வரும் இப்படத்தை தற்போது தெலுங்கிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி விடுதலை திரைப்படம் தெலுங்கில், ‘விடுதலா’ என்ற பெயரில் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தினை தெலுங்கு நடிகர் அள்ளு அர்ஜுனின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் வெளியிட இருக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வமான தகவலை ட்ரெய்லருடன் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
Here's Action-packed Thriller #VidudhalaPart1 Trailer ❤️????
▶️https://t.co/REbdq8LSRH#VidudhalaOnApr15th ????#AlluAravind #VetriMaaran @ilaiyaraaja #BunnyVas @VijaySethuOffl @sooriofficial @BhavaniSre @menongautham @elredkumar @rsinfotainment @mani_rsinfo @DirRajivMenon #GFD pic.twitter.com/zruNZduy1g
— GA2 Pictures (@GA2Official) April 8, 2023