தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர்.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். படம் ரூ 350 கோடி வசூலை தாண்டி வேட்டையாடி வருகிறது.
இப்படியான நிலையில் இந்த படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. படம் தொடர்ந்து நல்ல வசூலை பெற்று வருவதால் திரையரங்கில் வெளியாகி 28 நாட்கள் ஆன பிறகு தான் OTT-ல் வெளியிடப்படும் என படக்குழு முடிவு செய்துள்ளது.
மேலும் இந்த படம் நெட்ப்ளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய இணையதளங்களில் வெளியாக உள்ளது என்பதை குறிப்பிடப்பட்டது.
