லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான `BADASS’ பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது.
இந்த பாடல் வெளியான ஒரே நாளில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் தொடர்ந்து இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
Ivan vettaikku
setharanum bayandhu ????
Hunting 10M+ real time views in style ????#Badass ???? https://t.co/nIUqD3hj1q #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @7screenstudio @Jagadishbliss @VishnuEdavan1 @SonyMusicSouth… pic.twitter.com/S0uj4hK2Nj— Seven Screen Studio (@7screenstudio) September 29, 2023