Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வீட்டுக்கு வந்த ரோகினி மாமா.வெட்கபட்ட விஜயா.இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

siragadikka aasai serial episode update 23-01-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மீனா ஆரத்தி கரைச்சு வச்சியா இத பண்ணியா அதை பண்ணியா என ரோகினியின் மாமாவை வரவேற்பதற்காக இங்கும் அங்கும் ஓடி கொண்டிருக்கிறார் விஜயா.

பிறகு இதை நான் யோசிக்கவே இல்லையே அவருக்கு எந்த ரூமை கொடுக்கிறது என விஜய் யோசிக்க மனோஜ் ரவியோட ரூம் கொஞ்சம் பெருசா இருக்கும் அதை கொடுத்துவிடுங்கள் என்று சொல்ல ரவி அப்போ நாங்க எங்க போய் தூங்குறது என வாக்குவாதம் செய்ய முத்து இரண்டு ஓடுகாலிகளும் இங்க வந்து ரூமை பத்தி பேசிக்கிட்டு இருக்கு பாரு என திட்டுகிறார்.

அதைத் தொடர்ந்து ரோகிணி ஆன்ட்டி நாங்க எங்க ரூமையும் கொடுத்துடுறோம் என்று சொல்ல மனோஜ் அதிர்ச்சி அடைய எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல நாம ஹாலிலேயே தூங்கலாம் என்று சொல்கிறார். அடுத்ததாக விஜயா வெளியே வர கார் ஒன்று வந்து நிற்க மாமா வந்துட்டாரு மாமா வந்துட்டாரு என உள்ளே ஓடுகிறார் விஜயா.

எல்லாரையும் அழைத்துக் கொண்டு வெளியே வர காரிலிருந்து ஓவர் பில்டப் உடன் இறங்குகிறார் மாமா. எல்லாருக்கும் ஹாய் சொல்லிட்டு வயல்வெளியை பார்த்து வாய் பிளக்க ரோகினி அவரை ஆக்சன் மோடுக்கு கொண்டு வருகிறார்.

இவங்கதான் என்னுடைய மாமியார் என விஜயாவை அறிமுகம் செய்ய இவங்கதான் அம்மா மாதிரின்னு சொன்னியே என்று சொல்ல விஜயா சந்தோஷப்படுகிறார். பிறகு ரோகிணி மீனா மற்றும் ஸ்ருதி என மூன்று பேரையும் வைத்து ஆர்த்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்கிறார் விஜயா.

அண்ணாமலை அப்பா வந்திருந்தா இன்னும் சந்தோஷமா இருந்திருக்கும் என்று சொல்ல அவர் தான் சின்ன வயதிலேயே போயிட்டாரு பீடியை இழுத்து இழுத்து டிபி வந்து செத்து போயிட்டாரு என சொல்கிறார். இதனால் எல்லாரும் கன்பியூஸ் ஆக ரோகிணி என்னோட அப்பாவை கேட்டாங்க என டிராக்கை மாற்றிவிட அவரு ரொம்ப பிஸி நிக்கறதுக்கு நேரம் இல்லாம ஓடிக்கிட்டே இருக்காரு அதனால் தான் என்னை அனுப்பி வைச்சா அது என்ன சமாளிக்கிறார்.

ரோகினியோட அப்பா மாப்பிள்ளைக்கு சீர் செய்ய டிரஸ் எல்லாம் எடுத்துக் கொடுத்து அனுப்பி இருக்கிறார். மாப்பிள்ளைக்கு ஆம்லெட் போட சொன்னாரு என்ன சொல்ல ஆம்லெட் போட சொன்னாரா என எல்லோரும் அதிர்ச்சி அடைய ரோகினி அப்பா பிரேஸ்லெட் வாங்கி கொடுத்திருப்பது தான் சொன்னாரு அதைத்தான் மாமா இப்படி பண்ணியா சொல்றாரு அவர் எப்பவும் இப்படித்தான், காமெடியா எதாவது பேசிகிட்டு இருப்பார் என சமாளிக்கிறார்.

முத்துவும் இளநீர் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வர செல்வம் மலேசியாவில் இருந்து வந்திருக்காரு கண்டிப்பா சரக்கு வாங்கிட்டு வந்து இருப்பார் வெளிநாட்டு சரக்கு வேற லெவல்ல இருக்கும் அவர்கிட்ட கொஞ்சம் அடக்கி வாசி, சரக்கு வாங்கு என சொல்லி முத்துவை உள்ளே அழைத்து வருகிறார்.

இங்கே ரோகினியின் மாமா தட்டில் எல்லாவற்றையும் வைத்து மனோஜ் ரோகிணியை மட்டும் இன்றி பெரியவர்களையும் அழைக்கிறார். விஜயாவை பார்த்து நீங்களும் வாங்க ஆன்ட்டி என்று கூப்பிட அவர் அதிர்ச்சி அடைய நீங்க பாக்குறதுக்கு ரொம்ப யங்கா இருக்கீங்க, உங்கள சம்மந்தின்னு கூப்பிட மனசு வரல என்று சொல்ல விஜயா வெக்கப்பட்டு நிற்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

siragadikka aasai serial episode update 23-01-24
siragadikka aasai serial episode update 23-01-24