Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விரைவில் முடிவுக்கு வரும் பிரபல ஜீ தமிழ் சீரியல். வைரலாகும் தகவல்

end-card-to-vidhya-no-1-serial update

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த சீரியலில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

அதே போல் சேனலும் தொடர்ச்சியாக புதுப்புது சீரியல்களை களமிறக்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது நினைத்தேன் வந்தாய் என்ற சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி நல்ல வரவேற்பை பெற தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து மேலும் ஒரு புது சீரியல் களமிறங்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஆமாம், அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை தொடர்ந்து திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் வித்யா நம்பர் 1 சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தெரிய வந்துள்ளது, வெகுவிரைவில் சீரியல் கிளைமேக்ஸை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த சீரியல் முடிவடைந்ததும் புது வரவாக ” வீரா ” என்ற பெயரில் சீரியல் ஒன்று ஒளிபரப்பாக இருப்பதாகவும் இதில் ஹீரோவாக ரஜினி சீரியல் புகழ் அருண் நடக்க இருப்பதாகவும் நாயகியாக பேரன்பு சீரியல் புகழ் வைஷ்ணவி நடிக்க இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் பசங்க சிவகுமார், ரஜினி சீரியல் சுபிக்ஷா, வித்யா நம்பர் 1 நிஹாரிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவில் இந்த சீரியலின் கதை என்ன? எப்போதில் இருந்து ஒளிபரப்பாகும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

end-card-to-vidhya-no-1-serial update
end-card-to-vidhya-no-1-serial update