தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தலைவர் 171 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
படத்தின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து இன்னும் படப்பிடிப்புகள் தொடங்காமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
#Thalaivar171TitleReveal on April 22 ???? pic.twitter.com/ekXFdnjNhD
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 28, 2024