Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்குள் நுழைந்த ஐந்து போட்டியாளர்கள் யார் தெரியுமா? முழு விவரம் இதோ

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது

மொத்தம் 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியினை ஆர். ஜே விஜய் தொகுத்து வழங்க பாபா பாஸ்கர் மாஸ்டர், சினேகா மற்றும் சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர், கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் செமி பினாலே ரவுண்ட் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து வரும் ஏப்ரல் 14-ம் தேதி கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் ஜோடியாக சுரேஷ், ஹேமா பைனலுக்கு முன்னேறிய நிலையில் இந்த நிகழ்ச்சியின் பைனலில் பங்கேற்க போகும் மற்ற 4 ஜோடிகள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. சுரேஷ் – ஹேமா

2. இப்ராஹிம் – அக்ஷிதா

3. நவீன் – அக்ஷதா

4. கௌரி – விவேக்

5. ஜான் எட்வின் – ரிஷா ஜேக்கப்

இந்த 5 ஜோடியில் டைட்டிலை வெல்ல போவது யார் என்பதை கிராண்ட் பைனல் நிகழ்ச்சியில் காண தவறாதீர்கள்.

Finalist contestant of dance Jodi dance
Finalist contestant of dance Jodi dance