Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“பிரச்சனை எனது உடலில் இல்லை உங்கள் கேமராவில் தான்”: சர்ச்சைக்கு அமலாபால் விளக்கம்

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி மைனா படத்தின் மூலம் மக்களின் மனதை கவர்ந்தவர் அமலாபால். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் ஏ ஆர் விஜய் விவாகரத்து செய்து பிரிந்ததை தொடர்ந்து சமீபத்தில் தனது நண்பனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான அமலா பால் கடந்த சில மாதத்திற்கு முன்னர் குழந்தையை பெற்றுக்கொண்டார்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் கல்லூரி நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு குட்டையான கவர்ச்சி உடையில் வருகை தந்திருந்தார். இதனால் கல்லூரி நிகழ்ச்சிக்கு இப்படியா வருவது என சர்ச்சை கிளம்பியது.

இந்த சர்ச்சைக்கு பதிலடி கொடுத்துள்ளார் அமலாபால். அதாவது என்னுடைய உடையில் பிரச்சனை இல்லை.. மாணவர்களுக்கும் அது தவறாக தெரிந்ததாக தெரியவில்லை. உங்களது கேமராவில் தான் பிரச்சனை பல கேமராக்கள் கவர்ச்சிப்படுத்தி உள்ளன என பதிலடி கொடுத்துள்ளார்.

Amala Paul latest speech Viral
Amala Paul latest speech Viral