Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிட்டி சொன்ன வார்த்தை, ரோகினி எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

siragadikka asai serial episode

போனை முத்து தேடி அலைய ரோகினி பக்காவான பிளான் போட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து போன் காணாமல் போனதால் டென்ஷனாக மீனாவிடம் பேசுகிறார். இதை ரோகினி சந்தோஷமாக பார்த்து ரசித்து கொண்டிருக்கிறார். மீனா ஒரு கட்டத்திற்கு மேல் போன் தானே எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆக்குறீங்க புதுசு வாங்கிக்கலாம் என்று சொல்ல உடனே முத்து கோபப்பட்டு எனக்கு அந்த போன் தான் வேணும் என்று சொல்லுகிறார். உடனே செல்வத்திற்கு மீனாவின் ஃபோனில் இருந்து போன் போட்டு பார்ட்டிகளில் தேடுவதற்காக கிளம்புகிறார்.

மனோஜ் ரோகினியிடம் நீ கடைக்கு போயிடு,நான் வெளியே போயிட்டு வரேன் என்று சொன்னார். இல்ல மனோஜ் எனக்கு முக்கியமான வேலை இருக்கு என்று சொல்ல, சரி நீ போ நான் ஆளுங்க கிட்ட சொல்லிட்டு போறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார் உடனே வித்யாவுக்கு போன் போட்டு சிட்டியிடம் வர சொல்லுகிறார்.

மறுபக்கம் செல்வமும், முத்துவும் பார்ட்டி ஆல் முழுக்க தேடியும் போன் கிடைக்காததால் சத்யா ஓட வீடியோ வேற இருக்கு என்று செல்வத்திடம் பயந்து சொல்லுகிறார் அது மட்டும் வெளியே வந்துச்சுன்னா வீட்ல பெரிய பிரச்சனையா ஆயிடும் என்று சொல்ல உடனே செல்வம் நம்ம போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துரலாம். சிக்னல் வச்சு கண்டுபிடிச்சுடுவாங்க என்று சொல்ல இதனால் பிரச்சனை வராதா என்று கேட்க சிக்னல் வச்சு போன் தானே கண்டுபிடிக்க போறாங்க வீடியோ பார்க்க போறாங்க என்று சொல்லி கூட்டிச் செல்கிறார்.

ரோகினியும் வித்யாவும் சிட்டியை பார்க்க வருகின்றனர். உடனே சிட்டி இப்பையும் கைய வீசுகிட்டு தான் வந்திருக்கீங்களா என்று சொல்ல முத்து மொபைல் என்கிட்ட தான் இருக்கு என்று எடுத்து காட்டியவுடன் அதான் முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுது என்று சொல்லுகிறார். அந்த வீடியோவை எனக்கு உடனே அனுப்புங்க என்று சொல்ல ரோகினி முதல்ல பிஏவ எப்ப என் பக்கம் வரவிடாமல் பண்ணு அதுக்கப்புறம் நான் உனக்கு வீடியோ அனுப்புறேன் என்று சொல்ல அட்ரஸ் கேட்டு முதலில் போய் தூக்கிட்டு வாங்க என்று ஆட்களிடம் சொல்லி அனுப்பி வைக்கிறார் பிறகு என்ன விட நீங்க ரொம்ப கிரிமினல்லா இருக்கீங்க என்று சொல்லுகிறார். செல்வத்துடன் இப்பதான் அவன் ஒழுங்கா காலேஜுக்கு போய் படிச்சுக்கிட்டு இருக்கா இந்த டைம்ல இது மாதிரி ஏதாவது பிரச்சனை வந்தா என்ன பண்றது, என்னோட தப்பு தான் நான் அந்த பார்ட்டிக்கே போயிருக்க கூடாது என்று வருத்தப்பட்டு கொண்டே வர சரி நம்ப தான் கம்ப்ளைன்ட் கொடுக்க போறேன்னு பாக்கலாம் இரு என்று சொல்லுகிறார் செல்வம்.

போலீஸ் ஸ்டேஷனில் வேக வேகமாக வந்து முத்து என் போன் தொலைஞ்சுருச்சு என்று சொல்ல ஒரு லட்ச ரூபா போன என்று கேட்க பத்தாயிரம் ரூபாய் தான் சார் என்று சொல்லுகிறார். அப்ப இந்த நோட்ல எழுதி வச்சுட்டு போ என்று அசால்டாக சொல்லிவிட அவரும் கொஞ்சம் பார்த்து பண்ணி குடுங்க சார் என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறார். முத்துவின் டெய்லி கஸ்டமர் ஒருவர் செல்வத்திற்கு போன் போட்டு திருப்பதி போக வேண்டும் என்று சொல்ல இந்த டைம்ல எப்படி போகிறது என்று முத்து யோசிக்கிறார் லாங் சவாரி கைல காசு நிக்கும் நீ போயிட்டு வா நான் இங்கு வந்து பாத்துக்குறேன் என்று சொல்லி முத்துவை அனுப்பி வைக்கிறார்.

அந்த நேரம் பார்த்து சிட்டி ஆட்கள் பிஏவை அடித்து இழுத்து வருகின்றனர். உடனே வித்யாவும் ரோகினியும் ஒளிந்துக்கொள்கின்றனர். சிட்டியிடம் ரோகினி வீடியோவை கொடுத்தாரா? என்ன செய்யப் போகிறார்? விஜயாவுக்கு உண்மை தெரிய வருமா? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode
siragadikka asai serial episode