Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கம்ப்ளைன்ட் கொடுத்த சூர்யா, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

Moondru Mudichu Serial Promo Update 07-01-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்புராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி உங்க அப்பா சொல்றத மட்டும் கேப்பீங்களா? இல்ல நான் சொல்றது கேப்பீங்களா? என்று சொல்லிவிட்டு மாதவியிடம் ஒரு பிளானை சொல்லுகிறார். கடைசி வரைக்கும் அவ கழுத்துல அந்த தாலி ஏறக்கூடாது என்று சொல்லுகிறார். என்ன செஞ்சுருவீங்களா? என்று கேட்க சரிமா என்று சொல்லுகின்றனர். நந்தினி இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து நடந்த விஷயங்களை யோசித்துக் கொண்டிருக்க அருணாச்சலம் இன்னும் தூங்கலையாம்மா என்று கேட்கிறார்.

அவரிடம் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் இப்ப கூட எனக்கு தாலி பிரிச்சு கோக்குறதுல சம்மதம் இல்ல, நம்மளால சூர்யா சார்க்கு எதுவும் ஆயிட கூடாதுன்னுதா நான் இப்படி முடிவு எடுத்தேன். ஆனா அவங்க இஷ்டம் இல்லாம பண்றது பிரச்சினையாகும் என்று பயமா இருக்கு என்று சொல்ல, அதெல்லாம் ஒன்னும் இல்ல பாத்துக்கலாம் என்று அருணாச்சலம் சொல்ல இந்த தடவை எந்த பிரச்சனை வராமல் நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார். ஆனால் நந்தினி தாலி செயினை எடுத்து கொடுங்க நான் சாமி கும்பிட்டு போட்டுக்கிறேன் என்று சொல்ல, அருணாச்சலம் இது அப்படி செய்ய வேண்டிய வேலை இல்லமா எல்லாத்துக்கும் சாங்கியம் சம்பிரதாயம் இருக்கு இத பத்தி ரொம்ப யோசிக்காத என்று சொல்ல ஒரு தாட்டி ஒரு பிரச்சனை வரும்போது மனசு நொந்து போயிடுதயா என்று சொல்ல இதைப்பற்றி யோசிக்காமல் நீ போய் படு என்று அனுப்பி வைக்கிறார்.

மறுநாள் காலையில் பந்தல் போட ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றனர்.இது மட்டுமில்லாமல் வீட்டில் அலங்காரம் இருப்பதால் அருணாச்சலம் கல்யாணத்தை விசாரிக்க அவருக்கு தெரியாது என்று சொல்லுகிறார். பிறகு மாதவியிடம் வந்து விசாரிக்க நீங்க பண்ணி இருக்கீங்கன்னு நினைச்சோம்பா என்று சொல்ல அப்போ சூர்யா செஞ்சிருப்பான் என்று கேட்க சூர்யாவும் எதுவும் தெரியாது என்று சொல்லிவிட அருணாச்சலம் இது யாரு பண்ணி இருப்பாங்க என்று நால்வரும் பேசிக் கொண்டிருக்க சுந்தரவல்லி நான்தான் செஞ்சேன் என்று வந்து நிற்கிறார். மாதவி நீங்கலாமா என்று கேட்க,முதல் முறையா நம்ம வீட்ல இந்த மாதிரி ஃபங்ஷன் நடக்குது அதுக்காக தான் நான் இந்த ஏற்பாடு பண்ணேன் இதுல என்ன இருக்கு என்று கேட்கிறார். சுரேகாவும் அதே சந்தேகத்துடன் கேட்க இது என் பையனோட வாழ்க்கை அதனால முடிவு பண்ணிட்டீங்க அது நல்லபடியா நடக்கணும் இல்ல என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். சுந்தரவல்லி ரூமுக்கு வர மாதவியும் ,சுரேகாவும் பின்னாடியே வந்து எல்லா ஏற்பாடும் நீங்க தான் பண்ணீங்களா என்று கேட்க, ஆமா நான் தான் பண்ணேன் நீங்க நேத்து என்கிட்ட வேற ஒன்னு சொன்னிங்களேமா? என்று கேட்க ஆமா சொன்னேன் என்று சொல்லுகிறார். அப்போ நீங்க எங்கள நம்பலையா? என்று சொல்ல அப்படியும் சொல்லிட முடியாது என்று சொல்லிவிட்டு இப்ப நாங்க என்ன பண்ணனும் என்று இருவரும் கேட்க நடக்கிறத வேடிக்கை மட்டும் பாருங்க என்று சொல்லுகிறார். இருவரும் வெளியே வர அருணாச்சலம் மாதவியிடம் விசாரிக்க, எதுவும் தெரியலப்பா என்று சொல்ல அவ ஏதோ பெருசா பிளான் போடுறா நானே போய் பேசுறேன் என்று ரூமுக்குள் வருகிறார்.

எல்லாமே எப்படி போய்கிட்டு இருக்கு என்று கேட்க, நல்லாதான் போயிட்டு இருக்கு ஆனா நீ தான் ஏதோ பெருசா பண்ணுவியோனு தோணுது என்று சொல்ல, நான் கத்தி பேசி சண்டை போட்டா தான் சண்டைக்காரி அடங்காப்பிடாரின்னு சொல்றீங்க ஓரமா ஒக்காந்து இருந்தாலும் அதையேதான் சொல்லுவிங்களா என்று சொல்ல பங்க்ஷன் முடிகிற வரைக்கும் எதுவும் பேசாம இருந்தா சரி என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

தாலி பிரித்து கோர்ப்பதற்காக வரிசை தட்டுகள் ஏற்பாடு செய்ய நந்தினி விளக்கேற்றி சாமி கும்பிட மறுபக்கம் ஆட்டோவில் விஜி சில பெண்களுடன் வீட்டுக்கு வர அருணாச்சலம் அவரை வரவேற்கிறார். அவர்கள் அனைவரும் மேலே வர நந்தினியும் அவர்களை வரவேற்று அனைவரும் உட்காருகின்றனர். பிறகு சூர்யா அருணாச்சலம் என அனைவரும் வந்த உடன் சூர்யா இதுதான் தாலி கோர்க்கும் பங்க்ஷன டாடி என்று, கல்யாணம் ஆன பொண்ணுங்களுக்கு கொஞ்ச நாள்ல கயிறு திரிஞ்சு போயிடும் அதனால இது மாத்தி பிரித்து கோர்பார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்க, சுரேகா அம்மா வரலையாப்பா என்று சொல்ல அவ கீழ இருக்கா அங்கே இருக்கட்டும் என்று சொல்லிவிடுகிறார்.

அங்கு இருப்பவர்கள் தாலி செயின் கேட்க,அருணாச்சலம் மாதவியிடம் இன்னும் தாலி செயின் எடுத்துட்டு வரலையா? நீ போய் செயின் எடுத்துட்டு வாம்மா என்று சொல்ல, மாதவியும் செயின் எடுக்க போக வெளியில் பதற்றத்துடன் ஓடி வந்து செயின் அங்கே இல்லை என்று சொல்லுகிறார். உடனே கோபப்பட்ட அருணாச்சலம் என்ன விளையாடுறியா அங்க வச்ச செயின் எப்படி காணாம போகும் என்று சொல்ல நான் அங்கு தான் வச்சேன் இப்போ இல்லை என்று சொல்ல அருணாச்சலம், சுரேகா அசோகன் மாதவி என நால்வரும் தேடச் செல்கின்றனர்.

அருணாச்சலம் கோபமாக சுந்தரவல்லி இடம் வந்து இது உன்னோட வேலை தானே அமைதியா இருக்கும்போதே தெரியும் நீ எதுனா பெருசா பண்ணுவன்னு முதல்ல தாலி செயினை கொடு என்று சொல்லுகிறார். சுந்தரவல்லி எனது தாலி செயினை காணுமோ என்று கேட்க, அருணாச்சலம் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். என்ன நந்தினி இந்த டைம்ல இப்படி சொல்றாங்க என்று சொல்ல நான் தான் சொன்னேன் இல்ல அக்கா ஏதாவது ஒரு பிரச்சனை பண்ணி அந்த பழைய தூக்கி என் மேல போடுவாங்க என்று சொல்ல இது தாலி பிரிச்சு கோர்ப்பது சென்டிமெண்டான விஷயம் அப்படி இருக்கும்போது யார் இப்படி பண்ணுவாங்க என்று சொல்ல தெரியலக்கா என்று நந்தினி சொல்லுகிறார். மாதவியிடம் மீண்டும் வந்து என்னாச்சு கிடைச்சுதா என்று கேட்க கிடைக்கல என்று சொல்ல நீதான் பொறுப்பு என்று அருணாச்சலம் கோபப்படுகிறார். நகைக்கென காலா இருக்கு நடந்து போக என்று சொல்லுகிறார். சூர்யா ஒரு நிமிஷம் டாடி என்று சொல்லிவிட்டு கல்யாணத்தை கூப்பிட்டு இங்க ராஜமாதான்னு ஒருத்தங்க இருப்பாங்களே எங்க அவங்க என்று கேட்க கல்யாணம் யாரை சொல்றாரு என்று யோசித்த பிறகு என் தாய்க்குலம் எங்கே என்று கேட்கிறார்.கீழே இருக்காங்க என்று சொல்ல போய் கூப்பிடுங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார் சுந்தரவள்ளியும் மேலே வர, சூர்யா அங்கு இருப்பவர்களிடம் எனக்கு இந்த தாலி பிரிச்சு கோக்குறதுல பெருசா விருப்பம் இல்ல டாடி சொல்றதுனால நான் ஒத்துக்கிட்ட ஆனா அந்த தாலியை எடுத்து வச்சுக்கிட்டு இது மாதிரி பண்றது ரொம்ப ரொம்ப கேவலமா இருக்கு என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நான் சொன்னதை செஞ்சே தீருவேன் நகை இப்பவே வந்தாகணும் என்று சூர்யா சொல்லுகிறார். நந்தினி இடம் சென்று நீ எதுக்கு இவங்கள போய் நம்பர என்று கேட்கிறார். நான் எங்க சார் நம்பன எல்லாமே ஐயா செஞ்ச ஏற்பாடு என்று சொல்லுகிறார்.

சுந்தரவல்லி உட்கார்ந்து கொண்டிருக்க மாதவி என்னம்மா நாங்க இவ்ளோ தூரம் சொல்றோம் என்று சொல்லிவிட்டு போலீஸ் இன்னும் அஞ்சு நிமிஷத்துல வீட்டுக்கு வந்துருவாங்க என்று சொல்லுகிறார். போலீஸ் என்ன மிலிட்டரியே வரட்டும் நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார் சுந்தரவல்லி. என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.