Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருமண புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ், குவியும் லைக்ஸ்..!

actress keerthy suresh wedding photos viral

கிறிஸ்துவ முறைப்படி நடந்த திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி ,ரெமோ, பைரவா, சண்டக்கோழி 2 ,சர்க்கார் ,சாமி 2 போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

தமிழில் சமீபத்தில் இவரது நடிப்பில் ரகு தாத்தா என்ற திரைப்படம் வெளியாகி கலவை என விமர்சனங்களை பெற்றிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நீண்ட கால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கீர்த்தி சுரேஷ். அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

அவருக்கு இந்து முறைப்படி ஒரு திருமணமும் கிறிஸ்துவ முறைப்படி ஒரு திருமணமும் நடைபெற்றது. தற்போது கிறிஸ்தவ முறைப்படி நடந்த திருமண புகைப்படங்களை தனது instagram பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.