Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குபேரா படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். சமீபத்தில் இவரது இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதனைத் தொடர்ந்து இட்லி கடை என்னும் படத்தை இவர் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நடித்துள்ள குபேரா படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதாவது சேகர் கமுலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா,நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் தற்போது ரிலீஸ் தேதியும் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு ஜூன் இருபதாம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.