Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியா சொன்ன வார்த்தை, கோபி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

baakiyalakshimi serial episode update 30-07-25

கோபி கொலை பழியை ஏற்றுக்கொள்ள பாக்யாவுக்கு சந்தேகம் வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா பாக்யாவிடம் நான் இப்ப அப்பாகிட்ட பேசி ஆகணுமா வெளியிலிருந்து யார்கிட்டயாவது போன் வாங்கி பேசலாமா இல்லனா ஜெனி அக்கா கிட்ட போன் பண்ணி கேட்கலாம் என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் இப்போதைக்கு நம்ம எப்ப போன் பண்ணாலும் மாட்டிக்குவோம் இப்போதைக்கு அதை பத்தி பேச வேண்டாம் என சொல்லிக் கொண்டிருக்க செழியன் ஓடி வந்து நியூஸ் பேப்பரை கொடுக்கிறார். அதில் கோபி அரஸ்ட் ஆக இருக்கும் விஷயத்தை பார்த்து குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியாக இனியா அழுது கொண்டே அதற்கு தான் நான் வரமாட்டேன்னு சொன்ன நான் அரஸ்ட்டாக போறேன் நான் இங்க இருந்து போற டாடி ஏற்கனவே உடம்பு சரியில்லை என்று அழ பாக்யா நீ எங்கேயும் போக வேண்டாம் இனியா நீ வெளியே போனா பிரச்சனையா ஆயிடும் என்று சொல்லி அமைதியாக எழில் நாங்க யாராவது இருந்தாலும் அந்த இடத்தில் அப்படி தான் பண்ணி இருப்போம் எங்களுக்கு கஷ்டமா தான் இருக்கு அமைதியா இரு இனியா என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் கோபி அடிவாங்கி முடியாமல் சோர்வாக இருக்க போலீஸ் வந்தவுடன் தண்ணீர் கேட்கிறார் தண்ணீரை குடிக்க போகும் நேரத்தில் வாங்கி கோபியின் முகத்தில் ஊற்றிவிட்டு இப்பயாவது உன் பொண்ணு எங்க இருக்கான்னு சொல்லுவியா மாட்டியா இல்லனா உன் குடும்பத்தையே ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்து அரெஸ்ட் பண்ணிடுவேன் என மிரட்டுகிறார் அதற்கும் அமைதியாக இருந்த கோபி எனக்கு தெரியாது எந்த தப்பும் பண்ணல என சொல்லிக் கொண்டே இருக்க முதல்ல போய் உங்க அம்மாவை இழுத்துட்டு வாங்க என்று சொன்னவுடன் கோபி நான் தான் கொலை பண்ணினேன் என சொல்லுகிறார்.

என்ன சொல்ற என்று கேட்க என் பொண்ண அவன் டார்ச்சர் பண்ணா சுதாகர் என்ன மிரட்டுனா அடிச்சா அதனால அந்த கோவத்துல நான் நிதிஷ் கொலை பண்ணிட்டேன் என்று சொல்ல இன்ஸ்பெக்டர் அமைதியாகி விடுகிறார். பிறகு சுதாகரிடம் வந்து கோபி கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட விஷயத்தை சொல்ல அதற்கு சுதாகர் அதெல்லாம் நம்பாதீங்க அவங்க குடும்பத்தையே விசாரிச்சு ஜெயில்ல போடுங்க காலம் பூரா வெளியவே வரக்கூடாது என்று சொல்லுகிறார். என் சொத்தை அழிஞ்சாலும் பரவால்ல அந்த குடும்பத்தை நான் சும்மா விடமாட்டேன் என சொல்லுகிறார்.

மறுபக்கம் குடும்பத்தினர் அனைவரும் உட்கார்ந்து என்ன நடந்திருக்கும் என்று பேசிக் கொண்டிருக்க பாக்யா இனியாவிடம் திரும்பத் திரும்ப கேட்கிறேன் என தப்பா நினைக்காத இனியா அங்க என்ன நடந்துச்சுன்னு கொஞ்சம் தெளிவா சொல்றியா என்று கேட்க சொல்றமா என்று சொல்லுகிறார் சுதாகர் ஃபோன் பண்ண விஷயத்தையும் ஹோட்டலுக்கு வந்து நித்திஷிடம் சண்டை போட்டு தள்ளிவிட்டு விஷயத்தையும் சொல்ல பாக்யாவுக்கு சந்தேகம் வருகிறது. நீ ரொம்ப வேகமாக தள்ளினியா என்று கேட்க இல்லம்மா நான் கோவமா தான் தள்ளுனே தவிர வேகமாக தள்ளவில்லை என்று சொல்ல இது எல்லாமே நம்மளுக்காக பிளான் பண்ணி பண்ண மாதிரி தெரியுது என்று சொல்ல எழில் சிசிடிவி ஃபுட்டேஜ் இருக்காமா என்று கேட்க இந்த ஹோட்டலோடது இல்ல ஆனா பழனிச்சாமி சாரோட ஹோட்டல் இருக்கு என்று சொல்லிவிட்டு அந்த ஃபுட்டேஜ் கிடைச்சா நமக்கு நிறைய கேள்விக்கு விடை கிடைக்கும் என சொல்லுகிறார்.

பிறகு என்ன நடக்கிறது? எழில் என்ன சொல்லுகிறார்? பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial episode update 30-07-25

baakiyalakshimi serial episode update 30-07-25