தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் வந்திருக்கும் பிசினஸ்மேன் நந்தினியின் சாப்பாட்டை ரசித்து ரசித்து எந்த சாப்பாடு என்ன அரிசி என்ன ஸ்வீட் என விசாரித்து சாப்பிடுகின்றனர். நந்தினி அரிசி வகைகளைப் பற்றி பேச சுந்தரவல்லி எதுக்கு தேவையில்லாம என்ற சொல்ல இல்லை இன்ட்ரஸ்டிங்கா இருக்கு நீங்க பேசுங்க என்று சொல்ல நந்தினி பலவகையான அரிசி பெயர்களை சொல்லுகிறார். இப்போ எல்லாமே இதெல்லாம் அழிஞ்சு போயிடுச்சு என்று பேசிக் கொண்டே போக சுந்தரவல்லி நீங்க முதல்ல சாப்பிடுங்க என்று சுந்தரவல்லி சொல்ல பிறகு சுந்தரவல்லி இடம் பிசினஸ்மேன் இங்கிலீஷில் சாப்பாடு அருமையாக இருக்கிறது என்று சொல்லுகிறார். உங்க பிசினஸ் மட்டும் தான் நம்பர் ஒன்னு பார்த்தா சாப்பிடும் சூப்பராக இருக்கிறது என்று சொல்லி சாப்பிட்டு முடிக்கின்றனர்.
மறுபக்கம் சூர்யா மாலை பொக்கே உடன் கம்பெனியில் காத்துக்கொண்டிருக்க விவேக்கிடம் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து போன் வர சூர்யா சென்று விடுகிறார். மறுபக்கம் பிஸ்னஸ் மேன் உங்க சாப்பாட்டுக்காகவே இந்த வீட்டுக்கு வந்ததுக்கு ஒர்த் என சொல்ல நீங்க இதுக்கப்புறம் எப்ப வந்தாலும் சொல்லுங்க வீட்ல இருந்து சாப்பாடு கொடுத்து விடலாம் என்று சொல்லுகிறார். பிறகு சுந்தரவல்லி ஆபீஸ் போகலாம் என்று முடிவெடுத்து விட்டு கொஞ்ச நேரம் என சொல்லிவிட்டு அசோகனை அழைத்து நீ என்ன பண்ணுவியோ தெரியாது நந்தினி ஆபீஸ்க்கு வரக்கூடாது என்று சொல்லிவிடுகிறார். சரிங்க அத்தை நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் பிசினஸ்மேன் ஆபிஸ்க்கு வந்து விட வெல்கம் பண்ணும்போது சூர்யா இல்லாததால் சுந்தரவல்லி டென்ஷன் ஆகிறார் பிறகு ஆபீசுக்குள் அழைத்துச் சென்று இடத்தை சுற்றி காண்பித்துக் கொண்டிருக்க மறுப்பக்கம் அசோகன் பைல் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து நந்தினி இடம் காட்டி இதில் உன்னோட கையெழுத்து வேண்டும் என சொல்லுகிறார் ஆனால் நந்தினி தயங்க என்னமா சொன்னா போட மாட்டேங்குற என்று கேட்க சூர்யா சார் சொல்லாமல் நான் எதையும் கையெழுத்து போடவா நான் நினைக்கிறேன் என சொல்ல அசோகன் வேறு வழி இல்லாமல் எழுந்து சென்று விடுகிறார். பிறகு ஆபீசுக்குள் வந்து வீடியோ மூலம் பாக்டீரியை பார்த்துவிட்டு ரொம்ப சூப்பரா இருக்கு என்று சொல்லி பாராட்டுகிறார்.
அப்போ அடுத்து என்ன முடிவு பண்ணலாம்ன்னு பேசிடலாமா என்று அருணாச்சலம் சொல்ல அது எல்லாத்தையும் நான் மெயிலில் அனுப்பிட்டேன் என்று சொல்ல அது எல்லாத்தையும் ரெடி பண்ணி நாங்க ஃபைல் பண்ணிட்டோம் என்று சொன்ன அப்போ கையெழுத்து போற்றலாம் என்று சொல்லி முடிவெடுக்க அசோகன் ஃபைல் எடுத்துக் கொண்டு வந்து சுந்தரவல்லி இடம் கொடுக்க நந்தினி கையெழுத்து போடாத விஷயத்தை பார்த்து கடுப்பாகிறார் சூர்யா எங்கே என கேட்க போன் போக மாட்டேங்குது என்று சொல்ல சுந்தரவல்லி வேறு வழியே இல்லாமல் கையெழுத்து போட்டுவிட்டு டென்ஷனாக உட்கார்ந்து இருக்கிறார்.
பிசினஸ்மேன் உங்களுடைய இன்னொரு சைனிங் அத்தாரிட்டி உங்களோட மருமகள் எங்க என்று கேட்க சுந்தரவல்லி உடம்பு சரியில்லை என சமாளித்துக் கொண்டிருக்க சூர்யா நந்தினி உடன் வருகிறார். சூர்யாவிடம் இவங்க வீட்ல சமையல் பண்றவங்களாச்சே இவங்களை எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க என்று கேட்க இவங்க ஒன்னும் சமையல் பண்றவங்க கிடையாது என்னோட வைஃப் நந்தினி என்று சொல்லுகிறார். உங்க அம்மா சமையல்காரங்க தான் சொன்னாங்க என்று சொல்ல, சுந்தரவல்லி இடம் மாமியார் மருமகனா சண்டை வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி சொல்லுவீங்களா நல்ல வேலை இப்பதான் சைன் போடறதுக்கு இல்லையேன்னு கேட்டோம் கரெக்டா கூட்டிட்டு வந்துட்டீங்க என்று சொன்ன சூர்யா நந்தினியை உட்கார வைத்து கையெழுத்து போடச் சொல்ல நந்தினி கையெழுத்து போடுவதைப் பார்த்து சுந்தரவல்லி கடுப்பாகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யாவிடம் எதுக்காக தான் என்ன கம்பெனிக்கு அவசர அவசரமா வர சொன்னீங்களா என்று கேட்கிறார். இப்ப நீ யாருன்னு எல்லாருக்கும் தெரியும் யாரும் சமையல் காரி வேலைக்காரின்னு சொல்ல மாட்டாங்களா என்று சூர்யா சொல்லுகிறார்.மறுபக்கம் மாதவி சுந்தரவல்லி இடம் அவர் நாலு வாட்டி ஆபீஸ்க்கு போயிட்டு வந்தானா எல்லாரும் அவளை முதலாளி அம்மானு கூப்பிட ஆரம்பிச்சிடுவாங்க, அவ முதலாளி நான் பண்ணிங்க யார் என்று ஏத்தி விடுகிறார்.
மறுபக்கம் சூர்யா சுந்தரவல்லி இடம் ஏகே குரூப் ஆஃப் கம்பெனி வந்து நம்ம கூட ஒர்க் பண்றாங்கன்னா அதுக்கு காரணம் நந்தினிக்கு சைனிங் அத்தாரிட்டி கொடுத்த நேரம் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
