Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கரண் ஜோகர் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

A perverse decision by Karan Johar

பாலிவுட் பிரபலங்களில் ஒருவர் கரண் ஜோகர். 50 வயதான இவர் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத் திறன் கொண்டவர். பாலிவுட் திரையுலகில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவர் ஷாருக்கானின் வெற்றிப்படமான ‘குச் குச் ஹோத்தா ஹை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

தற்போது இவர் காபி வித் கரண் என்ற பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் கரண் ஜோகர் சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறி உள்ளார். தனது சமூக வலைதள கணக்கை நீக்கியுள்ள கரண் ஜோக்கர் இது குறித்து தனது கடைசி பதிவு மூலம் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், “அதிகளவில் பாசிட்டிவ் எனர்ஜியை விரும்புகிறேன். அதன் முதல் படியாக சமூக வலைதளத்தில் இருந்து விலகுகிறேன். குட் பை” என தெரிவித்து உள்ளார். அண்மைக் காலமாக பாலிவுட் சினிமாவுக்கு எதிராக புறக்கணிப்பு முழக்கங்கள் முன்னெடுக்கப்படுவதால் கரண் இவ்வாறு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.